கோ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் அஜ்மல் புதிதாக நடித்து வரும் படத்திற்கு வெற்றிச்செல்வன் என்று பெயரிட்டுள்ளனர். சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மூன்று பேர்களை முக்கிய கதாபாத்திரங்களாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. புதுமையான கதையம்சம் கொண்ட இந்த படத்தில், அஜ்மல் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ராதிகா ஆப்டே நடிக்கிறார். இவர் ரத்த சரித்திரம் படத்தில் விவேக் ஓபராய் ஜோடியாக நடித்தவர்.
அஜ்மலுடன் இணை கதாநாயகர்களாக பின்னணி பாடகர் மனோ, ஷெரீப் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். கஞ்சா கருப்பு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ரமேஷ்குமார் ஒளிப்பதிவு செய்ய, மணிசர்மா இசையமைக்கிறார். கதை - திரைக்கதை - வசனம் எழுதி டைரக்டர் ருத்ரன் இயக்குகிறார். இவர் 100க்கும் அதிகமான விளம்பர படங்களை இயக்கியிருப்பதுடன், `யாவரும் நலம் படத்தில் இணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். சிருஷ்டி சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்துக்காக தற்போது சென்னையில் வளர்ந்து வருகிறது.
No comments:
Post a Comment