அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் பின்லேடன் பாகிஸ்தான் அபோதாபாத்தில் பதுங்கியிருந்தார். இதை அறிந்த அமெரிக்க ராணுவம் அவரை சுட்டுக் கொன்றது. இந்த சம்பவம் சினிமா படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. ஆஸ்கார் விருது பெற்ற டைரக்டர் காதரின் பிஜெலோ இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வருகிற அக்டோபரில் ரிலீசாகிறது.
பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தனக்கு சில தகவல்களை தந்து உதவும்படி இயக்குனர் காதரின் பிஜெலோ அமெரிக்க உளவுத் துறை மற்றும் ராணுவ தலைமையகத்துக்கும் (பென்டகன்) கடிதம் எழுதி இருந்தார். அதை எற்றுக் கொண்டு பின்லேடன் கொல்லப்பட்ட போது நடந்த சில நிகழ்வுகள் குறித்த தகவல்களை தந்து உதவியதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்க்கட்சியான குடியரசு கட்சியை சேர்ந்த எம்.பி. பீட்டர் கிங் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளார்.பின்லேடன் கொல்லப்பட்டது குறித்த ரகசிய தகவல்களை வெளியிட்டதன் மூலம் இச்சம்பவத்தில் ஈடுபட்ட ராணுவத்தின் சீல் 6-வது பிரிவினரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என புகார் தெரிவித்துள்ளார். பீட்டர் கிங் எம்.பி., உள்நாட்டு பாதுகாப்பு கமிட்டியின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment