நடிகை பூர்ணா கல்யாணம் செய்து கொள்ளாமலேயே இல்லற
பந்தத்தில் மூழ்கி விட்டதாக கோலிவுட் முழுவதும் பரபரப்பாக பேசிக் கொள்ளப்படுகிறது.
கேரளாவிலிருந்து இடம் பெயர்ந்து வந்த ஏராளமான நடிகைகளில் பூர்ணாவும் ஒருவர். கேரளாவிலிருந்து வந்த இறக்குமதி நடிகைகள் பெரிய அளவில் தமிழில் போணியாகி வரும் நிலையில் பூர்ணா மட்டும் இதுவரை ஸ்டார் அந்தஸ்தைப் பெறாமல் இருக்கிறார். இத்தனைக்கும் சிறப்பான நடிப்பு ஒத்துழைப்பை வழங்கும் நடிகைகளில் அவரும் ஒருவர் என்கிறார்கள்.
முன்னணிக்குத்தான் வரவில்லையே தவிர வதந்திச் செய்திகளில் நிறையவே அடிபடுகிறார் பூர்ணா. ஆரம்பத்தில் அவரை பரத்துடன் இணைத்துப் பேசினார்கள். பின்னர் நகுலுடன் இணைத்துப் பேசினார்கள். வெளிநாட்டுக்கு ஷூட்டிங் போனபோது நகுல் தனது ஸ்வெட்டருக்குள் பூர்ணாவை அணைத்து வைத்து குளிரைக் குறைத்தார் என்று கூட கூறினார்கள்.
இந்த நிலையில் தற்போது நடிகர் ஆதியுடன் இணைத்து பூர்ணா பலமாக கிசுகிசுக்கப்படுகிறார். இருவரும் சேர்ந்து ஒரே ஒரு படத்தில் நடித்தார்கள். ஆனால் பெரிய அளவில் இருவரையும் இணைத்து கிசுகிசுக்கள் வேகமாக பரவி வருகின்றன. இருவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள், கணவன் மனைவி போல வாழ்கிறார்கள் என்று கூட கூறுகிறார்கள்.
இருவரும் காதலிப்பதாக முன்பு செய்திகள் வெளியானபோது அதை இருவருமே மறுத்தனர். இந்த நிலையில் இருவரும் தற்போது கணவன், மனைவி போல குடித்தனம் நடத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது நிஜமான கல்யாணத்தில் போய் முடியுமா அல்லது பாதியில் பிடுங்கிக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கிறார்கள் இவர்கள் இருவரையும் பற்றித் தெரிந்தவர்கள்.
No comments:
Post a Comment