Tamil News

Sunday, January 8, 2012

ஸ்ரீசாந்தின் புதிய கேர்ள் பிரண்ட் ஷாசான் பதம்சி?: கிசுகிசுக்கும் பாலிவுட்


கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் புதிய கேர்ள் பிரண்ட் ஷாசான் பதம்சி என்று பாலிவுட் வட்டாரங்கள்
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் புதிய கேர்ள் பிரண்ட் ஷாசான் பதம்சி என்று பாலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. கிரிக்கெட் வீர்ரகளுக்கும், பாலிவுட் நடிகைகளுக்கும் ஏகப் பொருத்தம். எப்பொழுது பார்த்தாலும் யாராவது ஒரு கிரிக்கெட் வீரரோடு ஒரு பாலிவுட் நடிகையின் பெயர் அடிபடும்.


அன்மையில் விராத் கோலியும், சாரா ஜேனும் ஒன்றாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்த பட்டியலில் ஸ்ரீசாந்த் ஏற்கனவே உள்ளார். என்ன தற்போது புதிய கேர்ள் பிரண்ட் கிடைத்திருக்கிறது. அவ்வளவு தான். தில் தோ பச்சா ஹை ஜி படத்தில் நடித்த ஷாசான் பதம்சி தான் ஸ்ரீசாந்த் தோட்டத்தில் புதிய வரவு மலர் என்கிறார்கள். ஸ்ரீசாந்த் ஏற்கனவே ரியா சென்னுடன் ஊர் சுற்றிக் கொண்டிருந்தார்.


 பிறகு வேறு சிலருடனும் கிசுகிசுக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது ஷாசானுடன் இணைத்துப் பேசப்படுகிறார். தெற்கு மும்பையில் ஷாசானும், ஸ்ரீசாந்தும் காரில் உலாவினர். அப்போது இருவரும் மிகவும் நெருக்கமாக உட்கார்ந்திருந்தனர் என்று அவர்கள் இருவரையும் ஒன்றாகப் பார்த்த ஒருவர் கூறினார். என்ன ஷாசான், ஸ்ரீசாந்த்துடன் உங்கள்


பெயர் அடிபடுகிறதே என்று அவரிடம் கேட்டால், எல்லா நடிகைகளும் சொல்லும் அதே அக்மார்க் பதிலான நாங்கள் நல்ல நண்பர்கள் என்பதைத் தான் கூறினார். நான் கொஞ்சம் பிசியாக இருக்கிறேன். நான் பிறகு பேசுகிறேன் என்று கூறிவிட்டார்.


பந்து வீச்சை விட காதல் வீச்சில்தான் படு வேகமாக இருக்கிறார் ஸ்ரீசாந்த்

No comments:

Post a Comment