நிலவில் நீரெடுத்து முகத்தைக் கழுவி விட்டு வந்திருப்பாரோ என்னவோ! கண்கூச வைக்கிறது அழகு. வாளிப்பான உடலழகோடு தமிழுக்கு வரும் தீக்ஷாவை கோடம்பாக்கம் கொண்டாடுமா என்பது 'ராஜபாட்டை'க்குப் பிறகுதான் தெரியும். ரிச்சா, அமலாபால், சமீரா ரெட்டி - இவர்களின் கடும் போட்டியில் ஜெயிப்பாரா என்று அவரிடமே கேட்டோம்.
கோடம்பாக்கம் வருவதற்கு முன்னே கிளாமரில கொடிகட்டிட்டீங்க போல?
நான் ஃபெமினா அழகிப் போட்டியில கலந்துகிட்ட பொண்ணு. அங்கிருந்தே கிளாமர் தொடங்கிடுச்சு. அங்க நீச்சல் உடையில் வர்றது ஒரு ஃபாஷன். அதை பெரிசா பேசக்கூடாது. மற்றபடி படத்தில் அவசியமான இடத்தில்தான் நான் கிளாமரா வருவேனே தவிர படம் முழுக்க வரமாட்டேன்.
'ராஜபாட்டை'யில் விக்ரம் எப்படி?
விக்ரம் மட்டுமல்ல 'ராஜபாட்டை' யூனிட்டே ரொம்பவே என்னை கவனிச்சுக்கிட்டாங்க. ஃபிரண்ட்லியா பழகினாங்க. ஆரம்பத்துல கொஞ்சம் தயக்கமா இருந்துச்சு. என்னோட முதல் தமிழ்ப்படம் வேறு. யூனிட்ல எப்படி பழகுவாங்களோங்கிற பயம் இருந்துச்சு. அதில் டைரக்டர் சுசீந்திரன் தான், எனக்கு சீன் பற்றி ஆங்கிலத்தில் விளக்குவதற்குள் திணறிப் போவார். இப்ப பராவாயில்ல. விக்ரம் எனக்காக நிறைய ஐடியாக்கள் சொல்லித் தந்தார். ஸ்கூல் வாழ்க்கை முடிஞ்சு போற ஃபீலிங் இருக்கு, ராஜபாட்டை யூனிட்டை பிரியறது.
சென்னையில் உங்களுக்குப் பிடிச்ச இடம் எது?
சென்னைங்கிறதை விட இந்தியாவில் பிடிச்ச இடம் எதுனு கேளுங்க. எங்கப்பா வேலை டிரான்ஸ்ஃபர் காரணமா இந்தியாவுல பாதி ஊருக்குப் போய்ட்டேன். கொல்கத்தா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேஷ், காட்மாண்டு இப்படி நிறைய ஊர்களில் வாழ்ந்திருக்கிறோம். ஆனா சென்னை தான் அமைதியான ஊரா இருக்கு. ஸோ... சென்னை தான் எனக்குப் பிடிச்சிருக்கு.
தெலுங்கில் பல படங்கள் பண்ணிட்டு தமிழுக்கு வந்திருக்கீங்க. வொர்க்கிங் ஸ்டைல்ல கோடம்பாக்கம் எப்படி?
இங்க எல்லாமே சீக்கிரம் சீக்கிரம் முடிச்சிடுறாங்க. படம் ஆரம்பிச்சதும் தெரியல, ரிலீஸ் ஆனதும் தெரியல. அவ்வளவு ஸ்பீட். தெலுங்குல வொர்க்கிங் நாட்கள் அதிகமாகுது. அங்க நிறைய ஸ்டார்ஸ் என்னோட ஃபிரெண்ட்ஸ். இங்க இப்பதான் ஃபிரெண்ட்ஸூங்கள சேர்த்துக்கிட்டிருக்கேன்.
இங்க உள்ள கதாநாயகிகளுடன் போட்டி போட்டு தமிழ் சினிமாவில் தாக்குப் பிடிச்சிருவீங்களா?
யார் கூடவும் போட்டி போட நான் வரல. எனக்கான கேரக்டர்களை தமிழ்ல தேடித்தான் வந்திருக்கேன். என்னோட உருவ உடலமைப்பும் குளோப்ஜாமூன் கண்களும் குறும்புச் சிரிப்பும் ரசிகர்களுக்கு பிடிக்கும். இப்பவே என்னோட பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் என் அழகை ஆராய்ச்சி பண்ணி ஏகப்பட்ட மெசேஜ் வந்து குவியுது. தீக்ஷா கன்னம் சிவக்க சிரிக்கிறார்.
No comments:
Post a Comment