Tamil News

Sunday, January 8, 2012

டில்லி பெல்லி ரீ-மேக்கில் ஜெயம் ரவி - நாக சைதன்யா...!



இந்தியில் சூப்பர் ஹிட்டான டில்லி பெல்லி படம் விரைவில் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது. இதில் கதாநாயகன்களாக ஜெயம் ரவியும், நாக சைதன்யாவும் நடிக்கவுள்ளனர். கண்ணன் இப்படத்தை இயக்க உள்ளார். ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக இருக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி, தமிழிலும், நாக சைதன்யா தெலுங்கிலும் நடிக்கவுள்ளனர். தற்போது டைரக்டர் கண்ணன் இரண்டு மொழிக்கான திரைக்கதை மற்றும் வசன வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். படத்திற்கான மற்ற டெக்னீஷியன்கள் தேடும் பணி முடிந்தவுடன் விரைவில் படத்திற்கான முழு அறிவிப்பையும் வெளியிடுவார் எனத் தெரிகிறது.

No comments:

Post a Comment