லண்டனில் மேடம் டுஸாட் மியூசியத்தில் தனது மெழுகுச்சிலை இடம்பெறவிருக்கிறது, என்று பிரபல நடிகை மாதுரி தீக்ஷித் கூறியுள்ளார். லண்டனில் பிளாக்பூல் பகுதியில் புகழ் பெற்ற மெழுகு சிலை மியூசியமான மேடம் டுஸாட் உள்ளது. இங்கு உலக தலைவர்கள் மற்றும் பிரபல நடிகர், நடிகைகளின் முழு உருவ மெழுகு சிலைகள் இடம்பெற்றுள்ளன.
பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், ஹிருத்திக் ரேஷன், ஐஸ்வர்யா ராய் போன்றோரின் மெழுகு சிலைகள் இந்த மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில்தான் கரீனா கபூரின் அழகு மெழுகுச்சிலை நிறுவப்பட்டது. இந்த வரிசையில் 90களில் பாலிவுட் உலகின் கனவுக்கன்னியாக வலம் வந்த நடிகை மாதுரி தீக்ஷித்தின் மெழுகுச்சிலை நிறுவப்பட உள்ளது. இதனை தனது ட்விட்டரில் வெளியிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்துள்ள மாதுரி, தனக்கு இதுவரை ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என்று கூறியிருக்கிறார்.
No comments:
Post a Comment