Tamil News

Sunday, January 8, 2012

கடைசியா ஒரு குத்தாட்டம் போட முடியுமா!' - நயனுக்கு வலை விரித்த சிம்பு, தரணி!!


'எல்லாம் முடிஞ்சி போச்சு' என சிம்புவின் வாய்தான் சொல்கிறதே தவிர, எப்படியாவது நயனுடன் மீண்டும் பேசிப்
 பழக வாய்ப்பைத் தேடுகிறது அவர் மனசு. விரைவில் நயன், பிரபுதேவாவின் மனைவியாகப் போகிறார் என்பது தெரிந்தும்.

சூர்யாவை திருமணம் செய்யப் போகிறார் ஜோதிகா என்று உறுதியான பிறகு சரவணாவில் அவரை ஜோடியாக்கி டூயட் பாடியதைப் போல, நயன்தாராவையும் கடைசியாக தனது ஒஸ்தி படத்தில் ஒரேயொரு பாட்டுக்கு நடிக்குமாறு வேண்டி விரும்பி அழைத்தாராம் சிம்பு. அவரது இந்த ஆசையை எந்த விலை கொடுத்தும் நிறைவேற்ற தயாராக நின்றாராம் இயக்குநர் தரணி.


சரி, என்னதான் சொன்னார் நயன்?




"ரொம்ப ஸாரி... எனது கடைசி ரிலீஸாக ஸ்ரீராமராஜ்யம் படம்தான் இருக்க வேண்டும். அதில் எனது வேடம் சீதா தேவி. அந்த புனிதமான இமேஜோடு சினிமாவுக்கு குட்பை சொல்லவே விரும்புகிறேன். கண்டபடி குத்தாட்டம் போட என்னைக் கூப்பிடாதீர்கள்" என்று சொல்லிவிட்டாராம் 'கட் அண்ட் ரைட்டாக'.


ஆனால் இதற்காக மனம் தளராமல், அந்த ஆஃபரை அப்படியே ஸ்ரேயாவுக்கு கொடுத்துள்ளார் சிம்பு!

No comments:

Post a Comment