தமிழ் திரையுலகில் நாயகன் சிம்புவை புகழ்ந்து அவரது ரசிகர்கள் பாடல் ஒன்றை பாடி அசத்தியுள்ளனர்.தமிழ் திரையுலகில் மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற வெற்றித் திரைப்படங்களை தந்த சிம்புவுக்கு உலகம் முழுவதும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
தற்போது சிம்பு நடித்து திரையிடப்பட்டுள்ள ஒஸ்தி திரைப்படம், தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் சிம்புவின் ரசிகர்கள், சிம்புவை புகழ்ந்து பாடல் ஒன்றை பாடியுள்ளார்கள்.
பாடலின் ஒரு சில வரிகள்.. உன்னத கரத்தால் பிறந்தவனே, பல கைதட்டல்களோடு வளர்ந்தவனே, எங்கள் நெஞ்சத்தின் உள்ளே நுழைந்தவனே, பட்டையை கிளப்பும் வல்லவனே..
பொய்யான காதலுக்கு மன்மதன் நீதான், வித்தையை கற்ற வல்லவன் நீதான், அடக்க முடியா காளையும் நீதான், எங்கள் ஆசை வாலிபன் நீதான். அட வானம் தாண்டிய பல்லன் நீதான்.
காதல் அழிவதை தடுத்ததும் நீதான், பட்டி தொட்டியில் ராஜா நீதான். விண்ணில் ஒலிக்கும் STAR உம் நீதான் என்று சிம்புவை புகழ்ந்து ரசிகர்கள் பாடிய பாடலின் காணொளி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment