Tamil News

Sunday, January 8, 2012

பூஜா இலங்கை படமொன்றில் நடிக்கிறார்.



நான் கடவுள்' படத்துக்குப் பின் பூஜா சினிமா வாய்ப்புகளை தவிர்த்து வந்துள்ளார்.இடையில் 'துரோகி' படத்தில் சிறு வேடத்தை ஏற்றிருந்தார்.
திருமணம் செய்து கொள்ளப் போவதால்தான் சினிமா வாய்ப்புகளை பூஜா தவிர்ப்பதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது..தற்போது தன் தந்தையின் தொழிலில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்தநிலையில் இலங்கை படமொன்றில் அவர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..இது குறித்து அவரிடம் செவ்வி கண்ட போது, 'நான் கடவுள்' படத்துக்குப் பின் நிறைய வாய்ப்புகள் வந்தன.
ஆனால் எதிலும் நடிக்கவில்லை. காரணம் கேட்பவர்களுக்குப் பதில் சொல்ல எதுவுமில்லை. என் தந்தைக்கு உதவியாக இருந்து வந்தேன். தற்போது இலங்கை படமொன்றில் நடிக்கிறேன்.சிங்கள மொழியில் உருவாகும் அந்த படத்துக்கு 'குச ஃபாபா' என பெயரிடப்பட்டுள்ளது. இலங்கை நடிகர் ஜேக்சன் ஆண்டனி நடிக்கிறார். புத்த மதத்தின் பிரபல கதையொன்றை தழுவி இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இளவரசனாக ஆண்டனி நடிக்கிறார். தனக்கு இளவரசி வேடம் கிடைத்துள்ளது.விரைவில் தமிழ் சினிமாவில் நடிப்பது குறித்து முடிவெடுப்பேன்'' என பூஜா கூறுகிறார்.

No comments:

Post a Comment