Tamil News

Sunday, January 8, 2012

அபாயகரமான நடிகைகள் பட்டியலில் முதல் இடம்!




இணையதளங்களில் மிகவும் அபாயகரமான நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் கத்ரினா கைப்.தன்னுடைய அசத்தலான நடிப்பு மற்றும் அழகால் பாலிவுட்டைக் கலக்கி வருபவர் கத்ரினா. இதனால் இவருடைய படங்கள், வால் பேப்பர்கள், ஸ்கீரின் சேவர்கள், வீடியோக்கள் என இணையத்தில் பார்ப்பவர்கள் மிக அதிகம்.இதைப் பயன்படுத்தி சில விஷமிகள், இவரின் படத்தைப் பயன்படுத்தி கிளு கிளு படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுகிறார்களாம்.
இதைப் பார்க்க இளைஞர்கள் இணையத்துக்கு முண்டியடிப்பதால், வைரஸ்கள் அதிகம் பரவி வெப் தளங்கள் செயலிழக்கிறதாம். அந்த வகையில் வைரûஸ அனுப்ப அதிகம் பயன்படும் பிரபலத்தின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறாராம் கத்ரினா கைப்.
அதற்கு அடுத்தடுத்த இடத்தில் தீபிகா படுகோனே, கரீனா கபூர், சைப் அலிகான், ஜான் ஆப்ரகாம், பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய், பிபாசா பாசு போன்றோர் இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment