Tamil News

Sunday, January 8, 2012

கோவாவில் த்ரிஷா, பிபாஷாவுடன் ரானா ஜாலி .



தெலுங்கு நடிகருடன் காதலா என்றதற்கு த்ரிஷா பதில் அளித்தார். நடிகை திரிஷா, தெலுங்கு நடிகர் ரானா டக்குபதி மற்றும் அவரது நண்பர்கள் புத்தாண்டு கொண்டாட கோவா சென்றனர்.

அங்கு ரானாவும், திரிஷாவும் ஜோடியாக சுற்றினார்களாம். இதையடுத்து அவர்களுக்குள் காதல் என்று கிசுகிசு பரவியது. இது கோலிவுட், டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரானா ஏற்கனவே பாலிவுட் நடிகை பிபாஷா பாசுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறார்.

 இருவரும் டேட்டிங் செல்வதாகவும் பாலிவுட்டில் தகவல் வெளியாகிறது. சமீபத்தில் ரானாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூற ஐதராபாத் வந்த பிபாஷா பாசு அவரை சந்தித்து வாழ்த்து கூறினார். ஆனாலும் தங்களுக்குள் காதல் இல்லை. நண்பர்களாக பழகுகிறோம் என்று கூறினர். இந்நிலையில் த்ரிஷாவும், ரானாவும் கோவாவில் புத்தாண்டு கொண்டாடிய விவகாரம் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதுபற்றி த்ரிஷா கூறும்போது,‘‘ரானாவும் நானும் கடந்த 10 ஆண்டாக நண்பர்கள். இப்போதும் அவர் எனக்கு நல்ல நண்பராக இருக்கிறார். இதனால் இருவரும் புத்தாண்டை கோவாவில் கொண்டாடினோம். எங்களுடன் சக நண்பர்களும் வந்திருந்தனர்’’ என்றார். கோவா புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பிபாஷா பாசும் சென்று ரானாவுடன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். வழக்கம்போல இவரும் ரானா எனது நண்பர்தான் என்று கூறினார்.

No comments:

Post a Comment